போலி நகைகளை அடகு வைத்த 3 பேர் மீது வழக்கு
உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் உள்ள தனியார் தங்க நகை அடகு நிறுவனத்தில் ரூ.கெ1.76 லட்சத்துக்கு போலி நகைகளை அடகு வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தனியார் தங்க நகை அடகு வைக்கும் நிறுவனத்தில் கடந்தாண்டு டிசம்பர் 30ல் இதே ஊர் களிமேட்டுபட்டியை சேர்ந்த பாவா பக்ருதீன், கணேசன், செல்வி ஆகியோர் வந்து பாவா பக்குருதீன் பெயரில் 19.8. கிராம் எடையுள்ள நகைகளை ரூ. 97 ஆயிரத்திற்கு அடமானம் வைத்துள்ளனர். பின்னர் மறுநாள் பாவா பக்ருதின் தனியாக வந்து 10.1 கிராம் நகையை ரூ.79 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார். பிப்ரவரி மாதம் 20 ல் நிறுவனத்தின் தணிக்கை பிரிவினர், நகையை தணிக்கை செய்த போது, மூன்று நபர்கள் வைத்த நகைகள் போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிறுவன பணியாளர் மணிகண்டன், ஏப். 23 ல் தேனி எஸ்.பி. சிவபிரசாத்திடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் உத்தமபாளையம் போலீசார் பாவா பக்ருதீன், கணேசன், செல்வி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.