அடிதடி தகராறு: 4 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜாமணி. உடல் நலம் இன்றி வீட்டிலிருந்து வருகிறார். இவரது மகன் செல்வபாண்டியனிடம்,இதே தெருவைச் சேர்ந்த செந்தில், இவரது மனைவி ஈஸ்வரி, உறவினர்கள் பாலமுருகன், தனலட்சுமி ஆகியோர் உங்களால் தான் இந்த தெருவில் யாரும் நிம்மதியாக இருக்க முடியவில்லை என கூறி செல்வபாண்டியனை கையால் தாக்கினர். தடுக்க வந்த இவரது தாயார் சரஸ்வதிக்கு அடி விழுந்தது. சகோதரி பாண்டியம்மாளை கட்டையால் தாக்கி காயப்படுத்தினர். காயமடைந்த மூன்று பேரும் தேனி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெயமங்கலம் போலீசார் செந்தில் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.-