உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே எருமலைநாயக்கன்பட்டி விநாயகர் கோயிலைச் சேர்ந்த ரெங்கசாமி மனைவி ரமாதேவி 44. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் உங்களது வீட்டு கழிவுநீர் எங்கள் வீட்டருகே சாக்கடையில் கலக்கக்கூடாது என்றார். இதற்கு ரமாதேவி கழிவுநீர் சாக்கடையில் வழியாகத்தான் செல்லும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்திரசேகரன் மனைவி பிரியா, உறவினர்கள் விஜயா, கலைச்செல்வி ஆகியோர் ரமாதேவியை தாக்கினர். விஜயா கல்லால் அடித்து காயப்படுத்தினார். சந்திரசேகரன் ரமாதேவியை தாக்கினார்.பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ரமாதேவி அனுமதிக்கப்பட்டார். புகாரில் தேவதானப்பட்டி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை