உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உறவுமுறையை மாற்றி சொத்து விற்ற 4 பேர் மீது வழக்கு

உறவுமுறையை மாற்றி சொத்து விற்ற 4 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி: பாட்டியை தாய் என உறவு முறையை மாற்றி போலியான ஆவணங்களை காட்டி இடத்தை விற்பனை செய்த பேரன் உட்பட நான்கு பேர் மீது ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரை கே.புதூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன். இவரது தாயார் வைஜெயந்திமாலா. அவரின் தாயார் தனுஷ்கோடியம்மாள். இவருக்கு பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான இடம் உள்ளது. தனுஷ்கோடியம்மாளின் மகன் ஜெகநாதன் இறந்து விட்டதால் பெங்களூரு எலக்ட்ரிக் சிட்டி தெருவைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் பாரத். தனுஷ்கோடியம்மாள் பேரன் என்பதை மறைத்து மகன் என உறவுமுறையை மாற்றி தவறாக பத்திரத்தில் பதிவு செய்தார். இதற்காக போலி வாரிசு சான்றிதழ் பெற்று, போலிஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.இந்த சொத்தை மதுரை வடக்கு சிங்கராயர் காலனியைச் சேர்ந்த நுரைன் சல்மாவிற்கு விற்றுள்ளார். இதற்கு உடந்தையாக அல்லிநகரம் அருகே பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த கணேஷ், மதுரையைச் சேர்ந்த சிவத்தியா சோமசுந்தரம் ஆகிய நான்கு பேர் மீது வெங்கடேஷ்வரன் புகாரில் ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி