மேலும் செய்திகள்
மனைவி பிரிந்த வேதனை கணவர் தற்கொலை
17-Jul-2025
போடி, : போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் 57. இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சின்ராஜ் என்பவருக்கும் கடந்த வாரம் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக நேற்று சின்ராஜ் இவரது மனைவி பூங்கொடி, சகோதரிகள் பாலம்மாள், ராஜாத்தி, கொழுந்தன் அர்ஜுனன் ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து பெருமாள் மீது மலத்தை அள்ளி ஊற்றி உள்ளனர். இதனை பெருமாள் மனைவி பவுன்தாய், இவரது மகளும் தடுத்த போது, பூங்கொடி, பாலம்மாள், ராஜாத்தி மூவரும் சேர்ந்து இருவரையும் அடித்து காயம் ஏற்படுத்தினர். பவுன்தாய் புகாரில் போடி தாலுகா போலீசார் சின்ராஜ், பூங்கொடி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக் கின்றனர்.
17-Jul-2025