உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லாரி உரிமையாளரை தாக்கிய 6 நபர் மீது வழக்கு

லாரி உரிமையாளரை தாக்கிய 6 நபர் மீது வழக்கு

உத்தமபாளையம்: கம்பம் தாத்தப்பன் குளத்தை சேர்ந்தவர் பீர் சாகிப் 41, இவர் லாரி வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். தேங்காய் லோடு ஏற்ற வாடகை ரூ.850 யை சமீபத்தில் கம்பத்தில் உள்ள சங்கத்தில் பேசி ரூ.950 என உயர்த்தினர்.இவரது லாரியை உத்தமபாளையத்தை சேர்ந்த லாரி புரோக்கர் தாஸ் குறைந்த வாடகைக்கு அனுப்பி உள்ளார். அதற்கு பீர் சாகிப் ஏன் குறைந்த வாடகைக்கு அனுப்பினீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தாஸ் மற்றும் அவருடன் இருந்த சின்ன பிரபு உள்ளிட்ட 6 பேர்கள் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.காயமடைந்த பீர் சாகிப் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உத்தமபாளையம் போலீசார் தாஸ், சின்ன பிரபு உள்ளிட்ட 6 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை