உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பார்வர்டு பிளாக் கட்சியினர் மீது வழக்கு

பார்வர்டு பிளாக் கட்சியினர் மீது வழக்கு

தேனி: தேனி மாவட்ட பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் தலைமையில் அக் கட்சியினர் அரசு கள்ளர் பள்ளி விடுதியை, சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் ஜூலை 23ல் போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேனி மாவட்டச் செயலாளர் காசிராஜன் தலைமையில் இக் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அல்லிநகரம் வி.ஏ.ஓ., மதுக்கண்ணன் புகாரில், தேனி போலீசார் முருகன் மற்றும் காசிராஜன் உள்ளிட்ட கட்சியினர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ