ஜாமினில் வந்து விசாரணைக்கு ஆஜராகாதவர் மீது வழக்கு
பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டம், கூத்தம்பட்டியைச் சேர்ந்தவர் விருமாண்டி 52. 2018ல் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் கலசம், உண்டியல் கொள்ளை வழக்கில் தேவதானப்பட்டி போலீசார் விருமாண்டியை கைது செய்தனர்.பெரியகுளம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 2023ல் நீதிமன்றம் விருமாண்டிக்கு ஜாமின் வழங்கியது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் விருமாண்டி தலைமறைவானார். தென்கரை போலீசார் விருமாண்டி மீது ஜாமினில் வந்து நீதிமன்ற வழக்கில் ஆஜராகாதது வழக்கு பதிவு செய்தனர். தென்கரை எஸ்.ஐ.,இத்ரிஸ்கான் தலைமையில் போலீசார் விருமாண்டியை தேடி வருகின்றனர்.-