உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடைக்கு பணம் தராமல் தகராறு செய்த இருவர் மீது வழக்கு

கடைக்கு பணம் தராமல் தகராறு செய்த இருவர் மீது வழக்கு

பெரியகுளம் : வடுகபட்டி வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் சின்னராசு 42. பஸ்ஸ்டாப் அருகே துரித உணவகம் நடத்தி வருகிறார். மேல்மங்கலத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், முத்துப்பாண்டி இருவரும் 'சிக்கன் பிரைட் ரைஸ்' சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லை. சின்னராசு பணம் கேட்டதற்கு அவதூறாக பேசி கையால் அடித்து, கடையை சேதப்படுத்தினார். கேட்டால் கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர். பெரியகுளம் மாவட்ட அரசுமருத்துவமனையில் சின்னராசு அனுமதிக்கப்பட்டார். இவரது புகாரில் தென்கரை எஸ்.ஐ., கர்ணன், முத்துகிருஷ்ணன், முத்துபாண்டியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ