| ADDED : டிச 28, 2025 05:41 AM
தேனி: பழனிசெட்டிபட்டியில் தனியார் மண்டபத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது. தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி தலைமையில் ஏராளமானோர் தி.மு.க.,வில் இணைந்தனர். விழாவில் பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், முன்னாள் எம்.பி., செல்வேந்திரன், ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, பழனிசெட்டிபட்டி துணைத்தலைவர் மணிமாறன், பேரூராட்சி செயலாளர் செல்வராஜ், அவைத்தலைவர் ஜோதிராம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி, பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் கவியரசு, மார்கையன்கோட்டை பேரூராட்சி தலைவர் முருகன், தேனி நகர செயலாளர் நாராயணப்பாண்டி, அயலக அணி அமைப்பாளர் ராஜன், நிர்வாகிகள் ஜெயக்குமார், செந்தில், ராஜா ரமேஷ், வழக்கறிஞர் நிஷாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.