உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கர்ப்ப வாய் புற்றுநோய் அதிகரிப்பால் பரிசோதனை தீவிரப்படுத்த உத்தரவு

கர்ப்ப வாய் புற்றுநோய் அதிகரிப்பால் பரிசோதனை தீவிரப்படுத்த உத்தரவு

கம்பம்: கர்ப்பவாய் புற்றுநோய் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.35 வயது முதல் 45 வயதுடைய பெண்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு தொற்றா நோய் பிரிவில் கர்ப்ப வாய் பரிசோதனைகளும் செய்ய உத்தரவிட்டது. மத்திய சுகாதார அமைச்சகம் கர்ப்ப வாய், மார்பகம், ஒரல் புற்றுநோய் பரிசோதனைகளையும் செய்ய நடவடிக்கை எடுத்தது.ஆனால் சமீப காலங்களில் அரசு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை குறைந்து விட்டது. 2023 ல் தமிழகத்தில் 8534 பேர்களுக்கு கர்ப்ப வாய் புற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது . 2030 க்குள் 15 வயது பெண் குழந்தைகள் 90 சதவீதம் பேர்களுக்கு கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 2014 ல் இருந்து 2023 வரை ஆண்டிற்கு ஆண்டு கர்ப்ப வாய் புற்றுநோய் அதிகரித்து வந்துள்ளது. எனவே கர்ப்ப வாய் புற்றுநோய் பாசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் தீவிரப்படுத்த தமிழக நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை