தேர் பராமரிப்பு, பெயின்டிங் பணிகள்
ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்துார் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேர் பராமரிப்பு, பெயின்டிங் பணிகள் துவங்கியுள்ளது.ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. இக்கோயில் சித்திரை திருவிழா மே 2ல் கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக மே10ல் கதலி நரசிங்கப் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியருடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மே 11, 12ல் தேரோட்டமும் நடக்க உள்ளது. தேரோட்ட நிகழ்ச்சிக்காக தேர் பராமரிப்பு, சுத்தப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன. தேரில் படிந்துள்ள துாசுகள் அப்புறப்படுத்தப்பட்டு பெயின்டிங் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.