மேலும் செய்திகள்
சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு
20-Aug-2025
தேனி: தேனி வீரபாண்டியில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாய் உட்பட 7 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை வாகைகுளம் வனிதா. இவர்களின் 17 வயது மகளுக்கும் தேனி உப்புக்கோட்டை மீனாட்சி சுந்தரத்திற்கும் வீரபாண்டியில் கடந்த மே 8 ல் திருமணம் நடந்தது. சிறுமி திருமணம் பற்றி 1098க்கு புகார் சென்றது. இந்த புகாரில் போடி ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் மகாலட்சுமி விசாரணை மேற்கொண்டார். சிறுமிக்கு திருமணம் நடந்ததை உறுதி செய்தவர், தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மணமகன் மீனாட்சிசுந்தரம், அவரது தாயார் பிரேமா, சிறுமியின் தாய் வனிதா, திருமணத்திற்கு உதவிய மதுரை பீபிகுளம் பாபு, இவரது மனைவி நிஷா, வீரபாண்டி மருத்துவமனை அருகே வசிக்கும் மோகன், அவரது மனைவி செல்வி ஆகிய 7 பேர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Aug-2025