உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு டிவிடென்ட் வழங்கியதால் மகிழ்ச்சி: 600க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் பயன்

கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு டிவிடென்ட் வழங்கியதால் மகிழ்ச்சி: 600க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் பயன்

பெரியகுளம்: தமிழ்நாடு காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள போலீசாருக்கு லாபத்திற்கான பங்கு 'டிவிடென்ட்' கடந்த தீபாவளிக்கு வழங்க வேண்டிய தொகை வீரபாண்டி சித்திரை திருவிழாவையொட்டி பணம் பட்டுவாடா துவங்கியதால் போலீசார் மகிழ்ச்சியில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய ஐந்து சப்- டிவிஷன்களுக்கு உட்பட்ட 31 போலீஸ் ஸ்டேஷன்கள், 15க்கும் அதிகமான புறக்காவல் நிலையங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் போலீசார்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை தேனி என்.ஆர்.டி., நகரில் செயல்படும் காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 600க்கும் அதிகமானோர் உறுப்பினராக உள்ளனர்.இதில் உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ. 13 லட்சம் வரை கடனாக வழங்கப்படுகிறது. கடன் வழங்கும் தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்து வரவு வைப்பதால் வங்கி லாபகரமாக இயங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிடித்தம் செய்யப்படும் பணத்தில் டிவிடென்ட் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில் குறைந்தபட்சம் ரூ 13 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஒவ்வொருவருக்கும் பணம் கிடைக்கும். இத்தொகை கடந்த ஆண்டு சங்க அலுவலர் ரவிச்சந்திரன் மருத்துவ விடுப்பில் சென்றதால் லாபம் ரூ.3 கோடியை பிரித்து வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 2023 தீபாவளி பண்டிகைக்கும், 2024 பொங்கல் பண்டிகைக்கும் வழங்கவில்லை. போலீசார் டிவிடென்ட் எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்த இருந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந் நிலையில், ஏழு மாதங்களுக்கு பிறகு வீரபாண்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் டிவிடென்ட் பணம் பட்டுவாடா துவங்கியது. இதனால் போலீசார் மகிழ்ச்சியில் உள்ளனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை