உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை

சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுரை

கம்பம்: மாவட்டத்தில் அதிக வெப்பமும், அதிகாலை பனி நிலவுவதால் சளி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால் குடிநீரை காய்ச்சி குடிக்க பொதுச் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது . பருவமழை ஜன 15 ல் முடிவிற்கு வந்தது. அணைகளில் நீர்மட்டம் குறையத் துவங்கி உள்ளது. இதனால் வறட்சி நிலவ துவங்கி உள்ளது. பொதுவாக குடிநீர் மூலம் தொற்று நோய்கள் பரவும்.வெயில் காலங்களில் வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும். தற்போது அதிகாலையில் பனிப்பொழிவும், தொடர்ந்து மாலை வரை நல்ல வெப்பமும் நிலவுகிறது.எனவே பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகின்றனர்.சித்தா டாக்டர் சிராசுதீன் கூறுகையில், இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் காலம். தற்போது அதிக வெப்பம் மற்றும் பனி நிலவுவதால் தொற்று நோய்களிலிருது தப்பிக்க குடிநீரை காய்ச்சி குடிக்கலாம். காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்து கொள்ளக் கூடாது. எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை சாப்பிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை