உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவு

தேனி: தேனி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு, ஆக்கிரமிப்புகள் தொடர்பான ஆவணங்களை 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் நீர்நிலை பகுதிகளில் அதிக அளவில் நிலங்கள் ஆக்கிரமித்து பல்வேறு வகையான பயன்பாட்டில் இருக்கின்றன. சில நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் தனியார் சிலர் நிரந்தர கட்டடங்கள் எழுப்பி உள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாயத்திற்கு தேவையான நீர் தேக்க முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றி பி.டி.ஓ.,க்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகராட்சி நிர்வாகங்கள் கணக்கிடும் பணியை துவங்க வேண்டும். அந்த பணியை முடித்து 14 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை