உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில தடகள போட்டிகளில் சாதனை பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

மாநில தடகள போட்டிகளில் சாதனை பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

கம்பம்: ஈரோட்டில் நடைபெற்ற மாநில தடகள போட்டிகளில் தொடர் ஒட்டம், நீளம் தாண்டுதல், தட்டு எறிதலில் தங்கப் பதக்கம் பெற்ற ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பள்ளி மாணவிகளை கலெக்டர் ஷஜீவனா பாராட்டினார்.தேனி மாவட்டத்தில் நடைபெற்ற குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில போட்டிகள் ஈரோட்டில் நடந்தது. போட்டிகளில் பங்கேற்ற ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தீபிகா, அஸ்மிதா, கபிஷா, ஜோகிதா ஆகியோர் 100 மீ.,தொடர் ஒட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றனர். தட்டு எறிதல், நீளம் தாண்டுதலில் மாணவி தீபிகா தங்கப்பதக்கங்களை பெற்றார். குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் பெற்று 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.சாதனை மாணவிகளை கலெக்டர் ஷஜீவனா பாராட்டினார். உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பள்ளியின் தலைமையாசிரியர் மரிய நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர். பயிற்சியாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை