உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓ.பி.எஸ்., தம்பி மீது புகார்

ஓ.பி.எஸ்., தம்பி மீது புகார்

தேனி:தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அ.தி.மு.க., கட்சி கொடி ஏற்றுவது தொடர்பாக அ.தி.மு.க.,வினருக்கும் பன்னீர்செல்வம் அணியினருக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., நகரச்செயலாளர் பழனியப்பன் பெரியகுளம் போலீசில் அளித்த புகாரில், 'முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவிற்கு அ.தி.மு.க., சார்பில் அனுமதி பெற்று விழா நடந்தது. அங்கு ஓ.சண்முகசுந்தரம்(பன்னீர்செல்வம் தம்பி) தலைமையில் வந்த அப்துல்சமது, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட சிலர் அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் ராமர், முன்னாள் எம்.பி., பார்த்திபன் உள்ளிட்டோரை தகாத வார்த்தையால் திட்டி, கட்சி கொடிஏற்ற முயற்சித்தனர். தடுத்த எனக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தது. பன்னீர்செல்வம் அணி நகர செயலாளர் அப்துல்சமது சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்