அமைச்சர் மீது புகார்
தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில், அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், 'தி.மு.க., அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது சைவ, வைண உணர்வுகளை அவமதிக்கும் விதத்தில் பேசினார். இவர் பேசிய வீடியோ வைரலானது. அவரது பேச்சை பலரும் கண்டித்தனர். அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.