உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி துவக்கம்

 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி துவக்கம்

தேனி: மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் துவங்கியது. பயிற்சி பற்றி பள்ளிக்கல்வித்துறையினர் கூறுகையில், மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 69, உயர்நிலைப்பள்ளிகள் 36, நடுநிலைப்பள்ளிகள் 99ல் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் உயர்நிலை, நடுநிலை பள்ளிகளுக்கு தலா 10 கணினிகள், புரஜெக்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா 20 கணினி வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தும் பணி சோதனை முறையில் துவங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கணினியில் வகுப்பு எடுப்பது எவ்வாறு என அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் 45 ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி வகுப்புகள் துவங்கி உள்ளது. பயிற்சி வகுப்பு உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்சி மைத்தில் நடந்து வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை