உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிலக்கடலைக்கு விலை இருந்தும் போதிய விளைச்சல் இன்றி கவலை

நிலக்கடலைக்கு விலை இருந்தும் போதிய விளைச்சல் இன்றி கவலை

போடி : போடி பகுதியில் நிலக்கடலைக்கு நல்ல விலை இருந்தும் காலம் தவறி பெய்த மழையால் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.போடி அருகே சில்லமரத்துப்பட்டி, சிலமலை, சூலப்புரம், மணியம்பட்டி, ராசிங்கபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதியில் 800 ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இதில் மழை பெய்யும் காலங்களில் நிலக்கடலை, மொச்சை, சிறு தானியங்கள் பயிரிடுவது வழக்கம். நிலக்கடலையை நடவு செய்து 110 நாட்களில் பலன் கிடைக்கும் என்பதால் பலரும் நிலக்கடலை சாகுபடி செய்வதில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.சிலமலை பகுதியில் கடந்த ஆகஸ்டில் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை விதைப்பு செய்த போது போதிய அளவு மழை இல்லை.கடந்த மாதம் போடி பகுதியில் தொடர் கனமழை பெய்தது. காலம் தவறி பெய்த கன மழையால் தற்போது நிலக்கடலை போதிய விளைச்சல் இன்றி உள்ளது.கடந்த ஆண்டு நிலக்கடலை நல்ல விளைச்சலும், கட்டுபடியான விலையாக கிலோ ரூ.40 வரை விற்றது. இந்த ஆண்டு நிலக்கடலை கிலோ ரூ. 40 முதல் ரூபாய் 45 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். வியாபாரிகள் சில்லரையில் கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்கின்றனர். நிலக்கடலையை இந்த ஆண்டு நல்ல விலை இருந்தும், காலம் தவறி பெய்த மழையால் போதிய விளைச்சல் இல்லாமல் மகசூல் குறைந்தது.இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ