உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்

ஆண்டிபட்டி; ஜி.உசிலம்பட்டி அருகே தோட்டத்து வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராஜதானி எஸ்.ஐ., முகமத் யாகியா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஜி.உசிலம்பட்டியில் இருந்து எஸ்.கதிர் செல்லும் ரோட்டில் தோட்டத்து வீட்டில் சோதனை செய்ததில் 144 பீர் பாட்டில்கள், 140 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அம்மாபட்டியை சேர்ந்த வைரம், ஜி. உசிலம்பட்டியை சேர்ந்த காட்டுராஜா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ