உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலித்தீன் பைகள் பறிமுதல்

பாலித்தீன் பைகள் பறிமுதல்

கூடலுார் : கூடலுார் நகராட்சியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் நகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.இந்நகராட்சியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் டீ கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள் என அனைத்திலும் தாராளமாக பாலிதீன் பைகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில் நேற்று நகராட்சி கமிஷனர் காஞ்சனா, சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமையில் அதிகாரிகள் மெயின் பஜாரில் உள்ள மளிகை கடைகள் ஓட்டல்கள், டீக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஏராளமான பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளை பயன்படுத்தியதால் 5-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ