மேலும் செய்திகள்
முதல்வர் கோப்பை போட்டிகள்
11-Sep-2025
தேனி: மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாருக்கு எஸ்.பி., சினேஹபிரியா பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்நடந்தது. இதில் தேனி ஆயுதப்படை கபடி அணி முதலிடம் வென்றனர். உத்தமபாளையம் சட்டம் ஒழுங்கு போலீஸ் அணி 2ம் இடம் பெற்றனர். வாலிபால் போட்டியில் 2ம் இடம் வென்றது. 100 மீ., ஓட்டத்தில் ஆயுதப்படை கண்ணன் முதலிடம், சங்கர்கணேஷ் 2வது இடம். 1500 மீ., ஓட்டத்தில் தனிப்பிரிவுபோலீஸ்காரர் ராஜேஷ்கண்ணன் 2ம் இடம் பிடித்தார். நீளம் தாண்டுதலில் கண்ணன் முதலிடம், கவுதம் மூன்றாமிடம். குண்டு எறிதல் மணிகண்டன் 2ம் இடம், சின்னமனுார் எஸ்.ஐ., தீபக் மூன்றாமிடம் பிடித்தார். ஆண்டிபட்டி ஏட்டு அசோக்குமார் செஸ் போட்டியில்மூன்றாமிடம் பிடித்தார். கேரம் ஒற்றையர் போட்டியில் பிரதாப் முதலிடமும், கேரம் இரட்டையர் பிரிவு போட்டியில் சரவணன்,பிரதாப் 2ம் இடம் பிடித்தனர். பெண்கள் அணி வாலிபால் போட்டியில் பெரியகுளம் அணி 2ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற 75 போலீஸ்காரர்களை எஸ்.பி.,பதக்கங்கள் அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன், ஆயுதப்படை உடனிருந்தார். ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. சுப்புராம் உடனிருந்தனர்.
11-Sep-2025