உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணையில் தொடர் மழை உயர்ந்து வரும் நீர்மட்டம்

பெரியாறு அணையில் தொடர் மழை உயர்ந்து வரும் நீர்மட்டம்

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி பெரியாறில் 27.6 மி.மீ., தேக்கடியில் 21.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு 487 கன அடியாக இருந்த நீர் வரத்து, வினாடிக்கு 584 கன அடியாக அதிகரித்தது. இதன்காரணமாக நீர்மட்டமும் சற்று, உயர்ந்து 114.90 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு 100 கன அடி குமுளி மலைப்பாதை இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் வலியுறுத்தல்

இந்தஅணைக்கு நீர்வரத்துப் பகுதியாக உள்ள சிவகிரி, சாஸ்தா கோயில், சுந்தரமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை அதிகமாக இருந்தும் நீர்வரத்து 584 கன அடியை தாண்டவில்லை. கேரள வனத்துறையினர் அணைக்கான நீர்வரத்து பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீரை திசை திருப்பியுள்ளதாக பலமுறை தமிழக விவசாயிகள் புகார் கூறியும் இதுவரை ஆய்வை நடத்தவில்லை. இப்போதாவது இப்பகுதிகளை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை