மேலும் செய்திகள்
கூட்டுறவு வார விழா கோலப்போட்டி பரிசளிப்பு
13-Nov-2025
கம்பம்: 72 வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு ராயப்பன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற கோலப் போட்டிகள் நடந்தது. போட்டிகளை உத்தமபாளையம் சரக கூட்டுறவு சார்பதிவாளர் சீனிவாசகப் பெருமாள் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல் மூன்று பரிசுகளை செல்வராணி, அருள் அகிலா, வின்சி ஆகியோர் பெற்றனர். நிகழ்ச்சியில் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் பற்றி கூட்டுறவு சங்க செயலர் கலையரசி விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் பங்கேற்றனர். கம்பம் உத்தமபுரம் தொடக்க - வேளாண் சங்கத்தில் கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. இதிலும் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற கோலப் போட்டிகள் நடந்தது.
13-Nov-2025