உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய பயணிகள்

தேனி பஸ் ஸ்டாண்டில் அலைமோதிய பயணிகள்

தேனி : பொங்கல் விடுமுறை முடிந்து பணி புரியும் ஊர்களுக்கு செல்ல தேனி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அதிக அளவில் கூடினர். இதனால் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பணிபுரிகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக ஜன., 13,14 சொந்த ஊர்களுக்கு வந்தனர். பொங்கல் விடுமுறை முடிந்து இன்று பணிக்கு திரும்புவதற்காக பலரும் நேற்று மாலை முதல் தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள 1, 3வது பிளாட்பாரங்களில் கூட்டம் அலை மோதியது. திருப்பூர், கோவை, சென்னை, திருச்சி பஸ்களில் அதிக அளவிலான பயணிகள் முண்டியடித்து ஏறி பயணித்தனர். மாலையில் தேனியில் இருந்து மதுரை சென்ற ரயிலிலும் வழக்கத்தை விட அதிக அளவிலான பயணிகள் பயணித்தனர்.தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 30 சிறப்பு பஸ்களும், மேலும் கோவை, திருப்பூர், சேலம், பழநி, திருச்சிபகுதிக்கு 60 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை