உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பொதுத் தேர்வுகளில் கம்பம் ஆர்.ஆர்.இன்டர்நேசனல் பள்ளி அசத்தல்

அரசு பொதுத் தேர்வுகளில் கம்பம் ஆர்.ஆர்.இன்டர்நேசனல் பள்ளி அசத்தல்

கம்பம் : கம்பம் ஆர். ஆர். இன்டர்நேசனல் பள்ளி சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகளில் 10 மற்றும் பிளஸ்2 தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். சாதனை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.கம்பம் ஆர். ஆர். இன்டர்நேசனல் பள்ளி 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் கார்த்திகேயன் 500 க்கு 490 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பள்ளி சேர்மன் ராஜாங்கம் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார். சாதனை மாணவர்களில் முதல் இடம் பெற்றவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயங்களும், பாடங்கள் வாரியாக 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயங்களும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீதம் கல்வி கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டது,நிகழ்ச்சியில் பள்ளியின் சேர்மன் ஆர். ராஜாங்கம், துணை தலைவர் ஆர்.அசோக் குமார், செயல் தலைவர் ஆர்.ஆர்.ஜெகதீஷ், முதல்வர் ஆனந்த வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை