உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சைபர் குற்றத்தடுப்பு போலீசார் விழிப்புணர்வு

சைபர் குற்றத்தடுப்பு போலீசார் விழிப்புணர்வு

தேனி : தேனி பங்களா மேட்டில் சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு நடத்தினர். எஸ்.பி., சிவபிரசாத் தலைமை வகித்தார். தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா முன்னிலை வகித்தார். ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை எஸ்.பி., மற்றும் போலீசார் ஒட்டினர். போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்கவும் அறிவுறுத்தினர். விழாவில் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை