உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சைபர் கிரைம் விழிப்புணர்வு

சைபர் கிரைம் விழிப்புணர்வு

தேனி : ஆண்டிபட்டி அரசு கலை கல்லுாரியில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சார்பில், சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து மாணவ, மாணவிகள் தப்பித்துக் கொள்ளும் நடைமுறைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் சுஜாதா தலைமை வகித்தார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சைபர் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், இதில் மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். சமூக வலைதளங்களை நாம் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதுகுறித்து பேசினார். துறையின் தொழில்நுட்ப எஸ்.ஐ., அழகுபாண்டி, நிதி சார்ந்த இணையத்தள மோசடிகள் குறித்தும் பேசினார். இருவரும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை