உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டி.சுப்புலாபுரம் நாழி மலையில் மகரஜோதி ஏற்றி வழிபாடு

டி.சுப்புலாபுரம் நாழி மலையில் மகரஜோதி ஏற்றி வழிபாடு

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி சக்கம்பட்டி நன்மை தருவார் திருத்தலம் ஐயப்ப சுவாமி கோயில் சார்பில் டி.சுப்புலாபுரம் நாழிமலையில் மகரஜோதி ஏற்றி வழிபாடு செய்தனர்.இக்கோயில் வளாகத்தில் 49 அடி உயர மாகாளி அம்மன், சப்த கன்னியருடன் குருபகவான் பீடம் ஆகியவை உள்ளன. இக்கோயிலில் டிச.,28ல் நடந்த மார்கழி உற்ஸவ விழாவில் மாகாளியம்மனுக்கு 108 குடங்களில் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்திலிருந்து சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி வழியாக ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக தினசரி சிறப்பு பூஜைகள் நடந்தன.விழா நிறைவு நாளான நேற்று கோயிலுக்கு நேர் எதிர் திசையில் உள்ள டி.சுப்புலாபுரம் நாழி மலையில் விரதம் இருந்த பக்தர்கள் சார்பில் மகரஜோதி ஏற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகளுடன் ஐயப்ப சுவாமி சரணகோஷமிட்டு மகரஜோதி தரிசனம் வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் செல்வம், ஹிந்து இளைஞர் முன்னணி முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார், கோயில் நிர்வாகிகள் பெருமாள் சாமி, ராணி, சௌந்தரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் முத்துவன்னியன், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்