உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தினமும் குடிநீர் சப்ளை: கம்பம் நகராட்சிக்கு அம்ரூத் நிதி இல்லை

தினமும் குடிநீர் சப்ளை: கம்பம் நகராட்சிக்கு அம்ரூத் நிதி இல்லை

கம்பம்: தினமும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகிப்பதால் கம்பம் நகராட்சிக்கு அம்ரூத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஒவ்வொரு குடியிருப்பிற்கும் வழங்க மத்திய அரசு ' ஜல்ஜீவன்' திட்டம் செயல்படுத்துகிறது. ஊராட்சிகள், பேரூராட்சிகளில் 'ஜல்ஜீவன்' என்ற பெயரினும், நகராட்சிகளில் அம்ரூத் என்ற பெயரிலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மாவட்டத்தில் தேனி, போடி, சின்னமனூர் நகராட்சிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் கம்பம் நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதுபற்றி நகராட்சி பொறியாளர் அய்யனார் கூறுகையில், நபர் ஒன் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்குகிறோம்.லோயர்கேம்ப்பில் ரூ.18 கோடியில் மேம்படுத்தப்பட்ட திட்டம் செயல்படுகிறது. சுருளிப்பட்டி ரோட்டில் பம்பிங் ஸ்டேசன் செயல்படுகிறது.போதிய அளவு குடிநீர் வினியோகம் உள்ளதால் தட்டுப்பாடு இல்லாததாலும் அம்ரூத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கவில்லை என்கின்றனர்.தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்வதால் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை