உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குப்பை கிடங்கில் தீ புகையால் பாதிப்பு

குப்பை கிடங்கில் தீ புகையால் பாதிப்பு

தேனி : தேனி நகராட்சியின் பழைய கம்போஸ்ட் ஓடை தெருவில் 30 ஆண்டுகளாக குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நகராட்சி ஊழியர்கள் மக்கும்,மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணி நடந்து வருகின்றன. பிப்.9ல் குப்பையில் தீ பற்றியதால், மக்கள் புகார் அளித்ததால் தீயணைப்புத்துறை தீ அணைத்தது. இந்நிலையில் தொடர்ந்து தீ அணையாமல் எரிந்து, நேற்று அது தொடர்ந்தது. இதனால் புகை மண்டலம் அப்பகுதி குடியிருப்புப் பகுதிகளில் பரவியது.இதுகுறித்து பொது மக்கள், பா.ஜ., நிர்வாகி விஜயகுமார் கமிஷனரிடம் புகார் அளித்தார். நகராட்சி வாகனங்களில் தண்ணீர் கொண்டு சென்று தீ அணைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை