மழைநீர் கசிவதால் ரயில்வே சுரங்க பாலங்களில் பாதிப்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி - மேக்கிழார்பட்டி ரோடு, ஆண்டிபட்டி - ஏத்தக்கோயில் ரோடு இவைகளில் ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சிறு மழை பெய்தாலும் சுரங்கப்பாலங்களில் அதிக அளவில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மோட்டார் மூலம் தேங்கும் நீரை அப்புறப்படுத்த சில மணி நேரங்கள் ஆகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் ரயில்வே சுரங்கப்பாலம் அருகே ஓடைகளில் செல்லும் மழை நீர் பாலத்தின் கான்கிரீட் வழியாக கசிந்து தேங்குகிறது. தொடர்ச்சியாக நீர் தேங்குவதால் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.ரயில்வே சுரங்கப்பாலங்களில் ஏற்படும் மழை நீர் கசிவை சரி செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.