உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொட்டக்குடி ஆற்றில் சேதமடைந்த மதகுகள்

கொட்டக்குடி ஆற்றில் சேதமடைந்த மதகுகள்

தேனி: மேற்குத்தொடர்ச்சி மழை பகுதியில் உருவாகும் கொட்டக்குடி ஆறு தேனி நகர் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் இணைகிறது.தேனி பள்ளிவாசல் தெருவில் கொட்டக்குடி ஆற்றில் இருந்து ராஜவாய்கால் உருவாகிறது. இந்த வாய்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் சில நாட்களுக்கு முன் வருவாய், பொதுப் பணித்துறையினரால் அகற்றப்பட்டது. ஆனால் நகராட்சியால் நிறுவப்பட்ட பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. கொட்டக்குடி ஆற்றில் இருந்து ராஜவாய்க்கால் உருவாகும் பகுதியில் உள்ள ஷட்டர் சேதமடைந்து வருகிறது. சமூக விரோதிகள் யாரேனும் அதனை கழட்டி செல்லும் முன் பொதுப்பணித்துறையினர் அதனை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்