உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொட்டிப் பாலத்தில் ஆபத்தான குளியல்

தொட்டிப் பாலத்தில் ஆபத்தான குளியல்

கூடலுார்: கூடலுார் அருகே 50 அடி உயரமுள்ள தொட்டிப் பாலத்தில் மக்கள் ஆபத்தான குளியலில் ஈடுபட்டு வருகின்றனர். லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியில் இருந்து 18ம் கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் 2வது கி.மீ.,ல் உள்ள தம்மணம்பட்டி தொட்டிப் பாலம் வழியாக வெளியேறும். சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் வெளியேறும் கால்வாய்க்கு குறுக்கே 500 அடி நீளத்தில் 50 அடி உயரத்தில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பசுமையாக அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களுக்கு நடுவே கால்வாய் செல்வதால் கண்ணுக்கு விருந்தாக காட்சி தருகிறது. இதனால் தண்ணீர் திறக்கும் போது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிந்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாலத்தின் மீது குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் 50 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து மேலும் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு பின் அப்பகுதியில் நீர்வளத்துறை சார்பில் குளிக்க தடைவிதித்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. மேலும் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். இதுதவிர அப்பகுதிக்குச் செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி வாகனங்கள் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் இப்பகுதியில் குவிந்துள்ளனர். ஆபத்தான நிலையில் பாலத்தின் மீது நடந்து சென்று மறு பகுதியில் குளித்து வருகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன் நீர்வளத்துறையினர் தடுப்பு நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ