உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்

தேனி: தேனியில் மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளன. இரவில் போதிய வெளிச்சமில்லாததால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகுகின்றனர். தேனியில் மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. மதுரை ரோட்டில் சிப்காட் பகுதியில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேம்பால பணிகள் துவங்கும் தனியார் பள்ளி அருகில் இருந்து, தேனி பகுதியில் தனியார் மருத்துவமனை வரை இரவில் போதிய விளக்குகள் இன்றி வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இரவில் அவதியடைகின்றனர். இது தவிர தொழிற்பேட்டை அருகே மேம்பாலத்திற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள சர்வீஸ் ரோட்டோரத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பெரிய பள்ளங்கள் உள்ளன. வாகனங்கள் விபத்தில் சிக்கும் வகையில் இவை உள்ளன. இது தவிர தண்டவாளங்கள் அருகே இந்த சர்வீஸ் ரோடு அமைந்தள்ளது. விபத்துக்களை தவிர்க்க பள்ளங்களை மூடி, தடுப்புகள் வைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ