உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூட்டி இருக்கும் கட்டடத்தை தீயணைப்புத்துறைக்கு வழங்கலாமே: மீட்பு பணிக்கு விரைவாக சென்று உதவ வாய்ப்பு

பூட்டி இருக்கும் கட்டடத்தை தீயணைப்புத்துறைக்கு வழங்கலாமே: மீட்பு பணிக்கு விரைவாக சென்று உதவ வாய்ப்பு

சின்னமனுார்: 'சின்னமனுார் நகராட்சியில் பயனற்ற நிலையில் உள்ள ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட சமையலறை கட்டடத்தை தீயணைப்பு துறைக்கு வழங்க வேண்டும்.' என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நகராட்சி வண்டிப்பேட்டையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சகல வசதிகளுடன் கூடிய சமுதாய சமையலறை கட்டடம் கட்டப்பட்டது. முதல்வரின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு என, இந்த சமையலறை கட்டப்பட்டது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக இக்கட்டடம் பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் தவறான காரியங்களுக்கு பயன்படுத்த துவங்கி விட்டனர். ஜன்னல்கள், கதவுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.சமையல் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டதால், சமையலறைக்கு வேலை இல்லாமல் போய் விட்டது என நகராட்சி சார்பில் கூறப்படுகிறது. வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் பூட்டியே வைத்துள்ளனர். இந்நிலையில் சின்னமனுார் தீயணைப்புத் துறைக்கு புதிய கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியும், இடம் இல்லாத சூழல் கடந்த ஒராண்டிற்கும் மேலாக உள்ளது.பயனற்ற நிலையில் உள்ள இக்கட்டடத்தை தீயணைப்பு துறை அலுவலகம் கட்டுவதற்கு நகராட்சி வழங்கினால், மாற்றங்கள் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் சின்னமனுார் நகரின் மத்தியப் பகுதி என்பதால் தீயணைப்புத்துறை மீட்புப் பணிகளுக்கு எளிதாக சென்று வர முடியும். எனவே புதிய பயனற்ற நிலையில் உள்ள சமையலறை கட்டடத்தை தீயணைப்புத்துறைக்கு வழங்க கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'நகராட்சி நேரடியாக வழங்க முடியாது. இரண்டு துறைகளின் செயலர்கள் மட்டத்தில் முடிவு செய்யப்பட வேண்டிய விசயம். எனவே துறை ரீதியாக முயற்சி செய்து தீயணைப்புத்துறைக்கு வழங்க வேண்டும்' என்றனர். விரைவில் இதற்கான பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்தால் நீண்ட நாட்களாக இடம் இன்றி தவிக்கும் தீயணைப்புத்துறைக்கு விரைவாக கட்டடம் கட்ட முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை