மேலும் செய்திகள்
பெருநகர் பாலத்தில் சாலை சேதம்
07-May-2025
கூடலுார்: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காஞ்சிமரத்துறை பாலத்தில் வளரும் ஆலமரத்தை பாலம் சேதமடைவதற்குள் வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலுாரில் இருந்து வெட்டுக்காடு, பளியன்குடி, ஊமையன் தொழு, சுருளியாறு மின்நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட காஞ்சிமரத்துறை பாலத்தின் வழியாக செல்ல வேண்டும். மேலும் அப்பகுதி விவசாய நிலங்களில் உள்ள விளை பொருட்களை வாகனங்களில் கொண்டு வர இப்பாதை அதிகம் பயன்படுகிறது. பாலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். கடந்த சில மாதங்களாக கைப்பிடிச் சுவர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்நிலையில் பாலத்தின் ஒரு பகுதியில் ஆலமரம் வளர்ந்துள்ளது. இதன் வேர் ஊடுறுவுவதன் மூலம் பாலம் பலம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து அதிகம் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மரம் வளர்ந்து பெரிதாவதற்குள் உடனடியாக வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்திஉள்ளனர்.
07-May-2025