உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி நகராட்சி அலுவலகம் சர்வே பிரிவில் மனுக்கள் வாங்காத அலுவலர்களையும், பொதுமக்கள் அலைக்கழிப்பு செய்வதை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன் இந்திய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்நடந்தது. மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அரசகுமார், ராஜ்குமார், தர்மர், தனலட்சுமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.தேனி நகராட்சி சர்வேயரை மிரட்டிய இ.கம்யூ., கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் பாலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன் பாண்டியர் தேசம் அமைப்பின் பொது செயலாளர் சுந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ