உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தேனி : கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பேயத்தேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் துாய்மை பாரத திட்ட வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கணினி இயக்குபவர்களுக்கு ஊதியம் உயர்த்திட வேண்டும், துாய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட துணைத்தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சண்முகநாதன், முருகானந்தம், ராஜ்குமார், பாண்டி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை