உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டியில் காப்பு கட்டி விரதம் துவங்கும் பக்தர்கள்

வீரபாண்டியில் காப்பு கட்டி விரதம் துவங்கும் பக்தர்கள்

தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் அதிக அளவில் காப்பு கட்டி விரதம் துவங்கி வருகின்றனர்.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி ஏப்.,16ல் நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து கம்பத்திற்கு ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். அம்மன் விரதத்தில் இருப்பதால் தினமும் தெள்ளுமாவு நெய்வேதியம் மட்டும் படைக்கப்பட்டு வருகிறது. அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம் கண்பானை, அங்கப்பிரதட்சனம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் செலுத்துவோர் கோயில் வளாகத்தில் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். செவ்வாய் கிழமையான நேற்று அதிக அளவிலான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். சித்திரை திருவிழா மே 6ல் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை