உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் மழைநீர் சீராக செல்வதில் சிரமம்

நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் மழைநீர் சீராக செல்வதில் சிரமம்

போடி: போடி அருகே சில்லமரத்துப்பட்டி சுத்த கங்கை ஓடை ஆக்கிரமிப்பால் மழைநீர் சீராக செல்லவும், விவசாய நிலங்களில் தண்ணீரை முழுவதும் தேக்க, முடியாத நிலையில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி ஒன்றியம் சிலமலை புலத்திற்கு கட்டுப்பட்டவை சுத்தகங்கை ஓடை பகுதியாகும். 18 ம் கால்வாய் நீர் திறந்து விடும் நிலையில் சுத்தகங்கை ஓடை நீர் வரத்து பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து சில்லமரத்துப்பட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி, டொம்புச்சேரி, அம்மாபட்டி, மீனாட்சிபுரம் பெரிய கண்மாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும். இதன் மூலம் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன.தற்போது சில்லமரத்துப்பட்டி பகுதியில் உள்ள சுத்தகங்கை ஓடைப் பகுதியின் இருபுறமும் தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் 150 அடி அகலம் உள்ள நீர்வரத்து ஓடை பகுதியானது ஆக்கிரமிப்பின் காரணமாக 60 அடி கூட இல்லாமல் குறுகலாக மாறி உள்ளது. தனி நபர்கள் ஆக்கிரமிப்பால் மழைக் காலங்களில் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலையில் தேக்கம் ஏற்படுகிறது. சில்லமரத்துப்பட்டி, அம்மாபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வரத்து வருவது குறைந்து வருகிறது. இதனால் நிலங்களில் தண்ணீரை தேக்கவும், கிணறுகளில் நீர்மட்டம் உயராத நிலை ஏற்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஓடைப் பகுதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் சீராக செல்லும் வகையில் செய்திட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை