மேலும் செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
3 hour(s) ago
பள்ளி கலை விழா துவக்கம்
3 hour(s) ago
குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வலியுறுத்தல்
3 hour(s) ago
தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு
3 hour(s) ago
உத்தமபாளையம்: உத்தமபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரங்கள் இரு மாதங்களாக வழங்காமல் இழுத்தடித்த நிலையில் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானவுடன் நேற்று காலையிலே உரியவர்களுக்கு பத்திரங்கள் வழங்கப்பட்டன.சொத்துக்களை பரிவர்த்தனை செய்யும் போது சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசு நிர்ணயித்த முத்திரை கட்டணத்தை செலுத்தி பதிவு செய்வார்கள். பத்திர பதிவு செய்த பின் 21 நாட்களில் பதிவு பத்திரம் உரியவர்களுக்கு வழங்க வேண்டும்.உத்தமபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 மாதங்களாக பதிவு பத்திரங்கள் பொதுமக்களுக்கு வழங்கவில்லை.இதனால் பொதுமக்களுக்கும், ஆவண எழுத்தர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்தது.இங்கு பணியாற்றிய சார்பதிவாளர் சுரேஷ் தற்போது கம்பம் சார்பதிவாளராக உள்ளார். அவர் வந்து தான் பத்திரங்களை வழங்க வேண்டும். ஆனால் அவர் வழங்காமல் கிடப்பில் வைத்தார். இதனால் பொதுமக்களுக்கு பதிவு பத்திரங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக நேற்று காலை நிலுவையில் வைக்கப்பட்டிருந்த பதிவு பத்திரங்களை கம்பம் சார்பதிவாளர் சுரேஷ், உத்தமபாளையம் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டு வழங்கினார். ஆவண எழுத்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago