உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பொதுத்துறை வங்கிகளில் சம்பள கணக்கு துவங்கும் அரசு ஊழியர்களுக்கு சலுகை

பொதுத்துறை வங்கிகளில் சம்பள கணக்கு துவங்கும் அரசு ஊழியர்களுக்கு சலுகை

தேனி:ஊதிய வங்கிக் கணக்கு துவங்கும் அரசு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு, கடன்களுக்கான வட்டிச் சலுகைகளை வழங்க 7 வங்கிகள் முன்வந்துள்ளன.அரசு ஊழியர்கள் தங்களது ஊதிய கணக்கை பராமரித்து வரும் முக்கிய வங்கிகள் கட்டணம் இன்றி பல சலுகைகள்அளித்திட முன் வந்துள்ளன. அவர்கள் விபத்தில் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டாலோ அல்லது நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடி வரை வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன. விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமண செலவுக்காக தலா ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குகின்றன. உயிரிழந்த அரசு அலுவலரின் மகள் உயர்கல்விஉதவித்தொகை ரூ.10 லட்சம். மேலும் தனிநபர் வங்கிக்கடன், வீட்டுக்கடன், கல்விக்கடன் பெறும் போது வட்டிச் சலுகைகள்வழங்க முன்வந்துள்ளன. இதற்காக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். அரசு ஊழியர்கள் இந்த வங்கிகளில் ஊதிய வங்கிக் கணக்குகளை கருவூலத்துறை மூலம் துவங்கி பயனடையுமாறுஅரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பணிகளை கருவூலத்துறைஅதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ