உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெட்டிய மரக்கிளைகளை அகற்றாததால் இடையூறு

வெட்டிய மரக்கிளைகளை அகற்றாததால் இடையூறு

பெரியகுளம் : பெரியகுளம் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் நகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு தரைதளத்தில் டி.எஸ்.பி., அலுவலகம், இ--சேவை மையம், முதல் தளத்தில் ஸ்டேட் பாங்க் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் பழமையான அரச மரம் இருந்தது. இதன் கிளைகள் அதிகளவில் வளர்ந்தன. இதில் நாரைகள் கூட்டமாக தங்கி பல எச்சத்தினை உமிழ்ந்தது. அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் அந்தப்பகுதியினர் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஜன்னல்களை எப்போதும் மூடிவைத்தனர். அலுவலகங்களுக்கும் இதே நிலை இருந்தது. பொதுமக்கள் புகாரில் நகராட்சி நிர்வாகம் உத்தரவில் 100 மீட்டர் சுற்றளவு மரக்கிளைகள் வெட்டப்பட்டது. இதனால் நாரைகள் இடமாறியது. வெட்டப்பட்ட மரக்கிளை துண்டுகள், கழிவுகள் டி.எஸ்.பி., அலுவலகம் முன்பு குவிந்து கிடக்கிறது. வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் மரக்கழிவுகளை தாண்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் கழிவுகளை அகற்றி, தூய்மைப்படுத்த வேண்டும்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி