உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 5, 10, 15 கிராம் கஞ்சா வழக்குகள் பதிவிட அறிவுறுத்துவதால்... அதிருப்தி l அதிகரிக்கும் பணிச்சுமையால் புலம்பும் போலீசார்

5, 10, 15 கிராம் கஞ்சா வழக்குகள் பதிவிட அறிவுறுத்துவதால்... அதிருப்தி l அதிகரிக்கும் பணிச்சுமையால் புலம்பும் போலீசார்

ஆந்திரா, தெலுங்கானா, உத்திராகண்டில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா சென்னையில் இருப்பு வைக்கப்படுகிறது. கம்பத்தில் கிலோ ரூ.10 ஆயிரம். ஆனால், கேரளாவில் கிலோ ரூ.ஒரு லட்சம் வரை விற்கிறது. எனவே அங்குள்ள இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் கூடுதல் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு 'கஞ்சா கேரியர்'களாக பணியாற்று கின்றனர். முன்னாள் தேனி எஸ்.பி.,யான சிவப்பிரசாத் கஞ்சா வழக்குகளில் விற்பனை செய்தவர் யார் என்பதை கண்டறிய சிறப்புக் குழுவை நியமித்து, ஆந்திரா அனுப்பி, அங்குள்ள மொத்த வியாபாரிகளை கைது செய்து, தமிழகம் கொண்டு வந்து சிறையில் அடைத்தார். இதனால் இங்குள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு பயம் ஏற்பட்டது. கஞ்சா விற்பனையும் குறைந்தது. ஆனால், தற்போது தலா 5, 10, 15 கிராம் என கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. போலீசார் கூறியதாவது: கைப்பற்றப்படும் கஞ்சா ஒரு கிலோ 250 கிராம் வரையிலும் சம்பவம் நடந்த எல்லையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கலாம். அதற்கு மேல் எடை இருந்தால் மதுரையில் இயங்கிவரும் போதை பொருட்கள் தடுப்பு சிறப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தான் ஒப்படைக்க வேண்டும். தற்போது கஞ்சா பறிமுதலான வழக்குகளில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடிதம் பெற வேண்டும். அதனை மதுரை தடயவியல் ஆய்வகத்தில் அளித்து, 'உறுதியளிப்பு சான்றிதழ்' பெற குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகிறது. அதன்பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால், அடுத்த நாளே குற்றவாளிக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் விடுதலை செய்துவிடுவது வழக்கம். இந்த வழக்கு முடிய ஒன்று முதல் 2 மாதங்கள் வரை ஆகும். இதனால் போலீசாருக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது. போலீசாரின் பணிப்பளுவை குறைத்து, மன உளைச்சலை தடுத்து கஞ்சா, விற்பனையும், பயன்பாட்டையும் தடுக்க எஸ்.பி., சினேகாபிரியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை