| ADDED : நவ 21, 2025 05:21 AM
தேனி: சட்டசபை தேர்தல் பணிக்காக அரசு அலுவலர்களுக்கு படிவங்கள் வினியோகம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான பணியை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. டிச., முதல் வாரத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சோதனை செய்யப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நேற்று முன்தினம் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து தேர்தல் பணி புரிய உள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்களில் அலுவலர் பெயர் விபரங்கள், பணிபுரியும் தொகுதி, முகவரி உள்ள தொகுதி உள்ளிட்ட விபரங்கள் கோரப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்தல் பிரிவினர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக சுமார் 6500 அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.