உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண் தற்கொலைக்கு காரணமானவருக்கு 10 ஆண்டு சிறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

பெண் தற்கொலைக்கு காரணமானவருக்கு 10 ஆண்டு சிறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

தேனி: திருமணம் செய்ததை மறைத்து, பெண்ணை ஏமாற்றி தற்கொலைக்கு காரணமான வினோத் 36, என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருப்பூர் மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மகேஸ்வரி 32. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவரை பிரிந்து, திருப்பூரில் டெய்லர் பணி செய்தார். அவருடன் டெய்லர் வேலை செய்த கண்டமனுார், ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த வினோத்36, உடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, திருமணம் செய்து கொள்கிறேன்' என கூறினார். இதனை நம்பி மகேஸ்வரி, வினோத் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். வினோத் தனது முதல் மனைவி உள்ள ஏழாயிரம் பண்ணைக்கு திரும்பினார்.பாதிக்கப்பட்ட மகேஸ்வரியின் சகோதரி கங்காதேவி 35, கண்டமனுார் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் வினோத், மகேஸ்வரியும் சேர்ந்து வாழ்ந்த போது 8 பவுன் நகை எடுத்து வந்துள்ளார். மேலும் அதை வாங்கிச் செல்ல வந்த மகேஸ்வரியை, வினோத், அவரது தந்தை சக்திதாசன் 50, தாய் முத்துவேலம்மாள் 49, மனைவி ஷீலாமேரி 30, ஆகிய நால்வர் திட்டி விரட்டினர். மனம் உடைந்த மகேஸ்வரி, 2017ல் வினோத் வீட்டின் முன் விஷம்குடித்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். கண்டமனுார் போலீசார் வினோத், அவரது தந்தை, தாய், மனைவி உட்பட நால்வர் மீது வழக்குப்பதிந்து வினோத்தை கைது செய்தனர். வழக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் குருவராஜ் ஆஜரானார். குற்றவாளி வினோத்திற்கு, நீதிபதி கோபிநாதன் 10 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம், மற்ற மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி