உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட குத்துச்சண்டை போட்டி; போடி மாணவர்கள் முதலிடம்

மாவட்ட குத்துச்சண்டை போட்டி; போடி மாணவர்கள் முதலிடம்

போடி; தேனியில் மாவட்ட அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் போடி நீலமேகம் அகடாமி மார்சியல் ஆட்ர்சில் பயிற்சி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 14 வயதுக்கு கீழ் 28 --- 30 கிலோ எடைக்கான மகளிர் பிரிவில் போடி ஜ.கா.நி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சக்தி ஸ்ரீ முதலிடமும், காமராஜ் வித்யாலயா மெட்ரிக்., பள்ளி மாணவி பிரகதிஷா 2 ம் இடம் பெற்றனர். 48 -- 50 கிலோ எடை ஆடவர் பிரிவில் போடி சிசம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் கோகுல் பாலன் முதலிடமும், ஜ.கா.நி., மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் ஹேவந்த், சவுடாம்பிகா நடுநிலைப் பள்ளி மாணவர் கவிபாரதி 2 ம் இடமும், தேனி மேரி மாதா மெட்ரிக் பள்ளி மாணவர் யாதிஷ் குமார் 3 ம் இடமும் பெற்றனர்.மகளிர் பிரிவில் 63- - 66 எடை போட்டியில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி துர்கைவேணி முதலிடமும், பாண்டி மீனா 3 ம் இடம் பெற்றனர். ஆடவர் பிரிவில் போடி ஜ.கா.நி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண் பாண்டியன் முதலிடம் பெற்றார்.தேனி மாவட்ட குத்து சண்டை வீரர்கள் சங்க மாவட்ட தலைவர் வடமலை ராஜைய பாண்டியன், மாவட்ட செயலாளர் நீலமேகம், மாஸ்டர்கள் சொக்கர் மீனா மோனீஸ்வர், வாஞ்சிநாதன், தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை